கேரள இளம் வயது பெண் மேயர் ஆர்யாவை மணக்கிறார் இளம்வயது எம். எல்.ஏ சச்சின் தேவ்.!!

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன், இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மேயர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இவருக்கு தற்போது 23 வயது ஆகிறது. கல்லூரி மாணவியான இவர், மேயராக பதவி ஏற்ற தகவல் நாடு முழுவதும் வைரலாக பேசப்பட்டது.

இந்நிலையில், மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுச்சேரி தொகுதி எம்எல்ஏவான கேஎம் சச்சின் தேவுக்கும் (வயது 28) விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பை எம்எல்ஏ சச்சின் தேவு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, எனக்கும் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு கட்சித் தலைமையும் அனுமதி அளித்துள்ளது. தற்போது மாவட்ட அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்கள் நடைபெற்று முடிந்ததும், திருமணம் நடைபெறும். திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை. மேலும், சச்சின் தேவ் கேரள சட்டமன்றத்தில் மிக குறைந்த வயது உடைய எம்எல்ஏ ஆவார்.