கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி) நடத்திய போராட்டத்தின் போது, நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாய்,
பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், நாட்டின் மகளை மன்னித்தது அவரது பெருந்தன்மை என்றும், இதனால் அவளுக்கு இப்போது ஒரு “புதிய வாழ்க்கை” கிடைத்துள்ளது என்றும் கூறினார். ‘நான் அவரை கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று அவளுடைய பிறந்தநாள், பிரதமர் மோடியிடமிருந்து அவளுக்குக் கிடைத்த மிகச்சிறந்த பரிசு ‘ஜீவதானம்’ — வாழ்க்கையின் வரம். இன்று என் மகள் மறுபிறவி எடுத்துள்ளாள்’ என்று அந்த தாய் கூறினார்.
தனது மகளின் செயல்களுக்காக மன்னிப்பு கேட்ட அவர், அந்தச் சிறுமி மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
20 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளைத் தடை செய்யுமாறு அவர் பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்தார். ‘இதற்குப் பதிலளிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த குழந்தை மட்டுமல்ல, இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இந்தச் சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள். 10 முதல் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை தடை செய்யுமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் குழந்தைகள் படிப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.’
“சிறு குழந்தைகள்” இதுபோன்ற போராட்டங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார். ‘இந்தக் குழந்தைகள் வெறுமனே பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள், அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேச வைக்கப்படுகிறார்கள்… அவர்களுக்கு உலகம் மற்றும் சமூகத்தைப் பற்றிய புரிதல் இல்லை, பெரியவர்களை எப்படி மதிப்பது என்பதும் தெரியாது. யாரைப் பற்றி என்ன பேச வேண்டும், எவ்வளவு பேச வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது’ என்று அவர் கூறினார்.
சமீபத்தில் சிறுமி மீது ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ பதியப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில் நொய்டாவைச் சேர்ந்த அந்தச் சிறுமி தனது கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து தாயாரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
அந்த வீடியோவில், இது தனது “முதல் மற்றும் கடைசி தவறு” என்றும், போராட்ட இடத்தில் இருந்த அமைப்புகளால் தான் தூண்டப்பட்டதாகவும் அவள் கூறுவதைக் காண முடிகிறது. ‘நான் போராட்ட இடத்தில் இருந்தேன், அங்கு பல குழுக்கள் பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தன. மற்றவர்களையும் அவ்வாறு பேசத் தூண்டினர். அந்த வார்த்தைகளைச் சொன்னதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன், என்னால் என் கண்களைக் கூட உயர்த்த முடியவில்லை. இதற்காக முழு தேசத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது எனது முதல் மற்றும் கடைசி தவறு’ என்று அந்த வீடியோவில் அவள் கூறுவதைக் கேட்க முடிந்தது.
ஜீரோ எஃப்.ஐ.ஆரில் அவளது பிறந்த ஆண்டு 1994 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தனக்கு 15 வயதுதான் ஆகிறது என்று சிறுமி வாதிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியான வீடியோ செய்தியில் பேசிய பிரதமர் மோடி, தன்னையும் தனது மறைந்த தாயாரையும் அவதூறாகப் பேசிய அனைத்துக் குழந்தைகளையும் மன்னிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவர்களைத் தண்டிப்பதோ அல்லது “நீதிமன்றங்களுக்கு அலைய வைப்பதோ” சூழ்நிலையை மாற்றப் போவதில்லை என்று அவர் கூறினார். ‘நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன், சமூகமும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.’ என்று கூறினார்.









