அருள்மிகு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டை, ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலை ஆண்டவர் திருக்கோவில் உள்ளது .இந்த கோவில் 40 ஆம் ஆண்டு கொடை விழா நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.நேற்று அன்னதானம், கணபதி பூஜை , மகா கணபதி பூஜை கணியான் மகுடம் பாடுதல் சாஸ்தா சிறப்பு பூஜை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.இன்று (செவ்வாய்) காலை 8 மணிக்கு அன்னதானம் நடந்தது. 9மணிக்கு திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்தும் வரும் நிகழ்ச்சியும்,கணியான் மகுடம் பாடுதல், நிகழ்ச்சியும நடந்தது இன்று இரவு 9 மணிக்கு அன்னதானம்நடக்கிறது. இதைடுத்து கணியான் மகுடம் பாடுதல்’ அலங்கார பூஜை படைப்பு பூஜை சுவாமிக்கு திரளை உணவு கொடுத்தல், அருள்வாக்கு மற்றும் பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எஸ்.டி. வடிவேல் பூசாரி மகன் வி. மாரியப்பன் செய்து வருகிறார்.