மருதமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூச தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

கோவை அருகே உள்ள மருதமலை அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி கோவில் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது .இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .இதையொட்டி தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று ( சனிக்கிழமை) காலையில் நடந்தது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, உட்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து வைரக் கற்கள் பதித்த தங்க கவச அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். காலை 7 மணிக்கு மேல் 8 – 30 மணிக்குள் சுப்பிரமணியசாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது .காலை 11 மணிக்கு வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணி சுவாமி வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தார் .பகல் 12 மணிக்கு திருத்தேரில் தம்பதி சமேதராக எழுந்தருளினார். 12:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது .விழாவில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் ,சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள்முருகனுக்கு அரோகரா என்று விண் அதிர கோஷங்கள் எழுப்பியவாறு பங்கேற்றனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேலே செல்வதற்கு 2 மற்றும் 4சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கார்களை நிறுத்தும் இடத்திலிருந்து மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு செல்வதற்கு கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டது. பாதயாத்திரை காவடி பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக போலீசாரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, துணை ஆணையர் ஹர்ஷினி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தார்கள்.