கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பக்கமுள்ள மயிலாடுதுறை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆழியார் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ரவி அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சேர்த்துமடை சரவணன் ( 39 ) அங்கலக்குறிச்சி தமிழரசன் ( 24 )கோட்டூர் கருணைவேல் ( 27 ) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 சேவல், பணம் ரூ 480 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல மகாலிங்கபுரம் போலீசார் அங்குள்ள கள்ளிப்பாளையம் சுடுகாடுஅருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கிட்டாம் பாளையம் ஜெயப்பிரகாஷ் ( 30 )குரும்பபாளையம் கார்த்திகேயன் ( 40 ) ஊஞ்ச வேலாம்பட்டி தங்கராசு ( 38 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .2 சேவல்பறிமுதல் செய்யப்பட்டது. பேரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பின்புறம் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சுண்டப்பாளையம் சக்திவேல் மகேந்திரன் (31) சுஜித் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .2 சேவல் பறிமுதல் செய்யப்பட்டது..
Leave a Reply