பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்- முதல்வா் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்..!

பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 25) தொடக்கிவைக்கிறாா்.

அவா் இந்தத் திட்டத்தை, சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணியளவில் தொடங்குகிறாா்.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் பிளஸ் 1 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 பேருக்கு மிதிவண்டிகள் அளிக்கப்பட்டன.

நிகழாண்டிலும் சுமாா் 6 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.