வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதாக கூறி பல பேரிடம் ரூ 7.50 லட்சம் வரை மோசடி: இன்ஜினியர் கைது..!

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் ( வயது 42) நகை வியாபாரி. இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக் குமார் ( வயது 38) என்பவர் கடந்த 18ஆம் தேதி மோகன்ராஜ் செல்போனில் தொடர்பு கொண்டார் . அப்போது அவர் நான் ஆர் .எஸ். புரம். டி.பி .ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ளேன். அதை மீட்பதற்காக வந்துள்ளேன். ரூ.1 லட்சம் மட்டும் குறைவாக உள்ளது,அதனை கொடுத்தால் நகையை மீட்டு விட்டு பின்னர் பணத்தை தங்களுக்கு திருப்பி கொடுத்து விடுவேன் என்று கூறினார்.இதனை நம்பியே மோகன் குமார் அசோக்குமாரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.அதன் பின்னர் அசோக் குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகன்ராஜ் இதுகுறித்து ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி அசோக் குமார் தேடி வந்தனர் .இதேபோலகாந்திபுரத்தைச் சேர்ந்த பழனிவேல் என்ற நகை வியாபாரி யிடம் ரூ.3.5 லட்சமும், ஒத்தக்கால் மண்டபத்தைச் சேர்ந்த மணிகண்டன் ( வயது 40) என்ற நகை வியாபாரியிடம் ரூ.3 லட்சமும் பெற்று மோசடி செய்துள்ளார் .இது குறித்து புகாரின் பேரில் ஆர் .எஸ். புரம். போலீசார் அவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். அடகு நகையை மீட்க பணம் தேவைப்படுவதாக கூறிய அசோக்குமார் 3 பேரிடம் மொத்தம் ரூ 7.5. லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.இதை யடுத்து அசோகுமாரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த அசோக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார் .இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், வேலை இழந்ததாலும்,அவர் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.இவர் ஏற்கனவே விருதுநகர் சிவகாசியில் நடந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் வங்கி கணக்கில் உள்ள ௹4 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.