கோவை தனியார் விடுதிக்குள் புகுந்து செல்போன் திருட்டு- “சோமட்டோ” டெலிவரி பாய்கள் கைது..!!

கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மகன் சதீஷ்குமார் ( வயது 29 ) இவர்கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்,இவருடன் சதீஷ்குமார் விக்னேஷ் குமார் ஆகியோரும் வேலை செய்கிறார்கள். இவர்கள் 3 பேரும் பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று இவர்கள் அறையின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது 2 ஆசாமிகள் அறைக்குள் புகுந்து அவர்களது 2 செல்போன்களை திருடினார்கள் அப்போது சதீஷ்குமார் எழுந்து சத்தம் போட்டார்.தப்பி ஓடும் என்ற இருவரையும் நண்பர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர் விசாரணையில் அவர்கள் திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலை சேர்ந்த தினேஷ்குமார் ( வயது 28) கரூர் பக்கம் உள்ள திருமலையூரை சேர்ந்த உதயகுமார் (வயது 27 என்பது தெரிய வந்தது இவர்கள் இருவரும். “சோமட்டோ” உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் டெலிவரி ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களிடமிருந்து 2 செல் போன் மீட்க்கப்பட்டது.