கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது . அதில் ரூ 5லட்சத்து 63 ஆயிரத்து 99 மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து உதவி மேலாளர் நடராஜன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் அவிநாசி சேவூர் அருகே உள்ள முனியாண்டி பாளையத்தைச் சேர்ந்த பாரதிதாசன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.இவர் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.