முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்.!!

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். அப்போது கேட் அருகே இருந்த காவலாளியிடம் கேட்டை இருக்க கூறினார். அதற்கு காவலாளி அனுமதி கேட்டு வருவதாக கூறியதாக தெரிகிறது. கேட் திறக்கப்படாததால் 2 அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். இதனைப் பார்த்த சிலர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது வெளியே இருந்த அதிகாரிகள் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். இதனால் சோதனை நடைபெறும் முன்பே முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சத்தம் கேட்டு வெளியே வந்த எஸ்.பி.வேலுமணி சொன்னவுடன் அவர்களை விடுவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் வீட்டுக்கு சென்று சோதனையை தொடங்கினர்.