திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீர் மாயம்.!!

கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள பட்டணம் ,ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 27) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று (திங்கள்) வெள்ளிங்கிரி கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது.கோவிலில் திருமணம் பதிவு செய்வதற்கான சான்றிதழ்களை கொடுத்து விட்டு வருவதாக இருசக்கர வாகனத்தில் பாலகிருஷ்ணன் சென்றார்.கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தாயார் சுபாஷினி சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.