மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது..!!

மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை டோல்கேட்டை கடந்து சென்ற வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.