கோவை பத்திர பதிவுத்துறை முன்னாள் டிஐஜிக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.!!

கோவையில் பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்தவர் வி. மணி (வயது 74) இவர் தனது பெயரிலும் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை
ரூ 22 லட்சத்து 83 ஆயிரத்து 583 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த வழக்கில் விசாரணை நிறை
வடைந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். மோகன ரம்யா பதிவுத்துறை முன்னாள் டி.ஐ.ஜி மணிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.,