கோவை குனியமுத்தூர் ,லவ்லி கார்டன், வசந்தம் சேர்ந்தவர் நசீர் இவரது மகன் நியாஸ் கமால் ( வயது 20) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. சி. ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் நடந்து சென்றார்.அப்போது முன் விரோதம் காரணமாக இவரை அதே பகுதியை சேர்ந்த அப்துல் பாசித் ஹாரூன் ராணி தாரிக் ஆகியோர் சேர்ந்து கல்லால் தாக்கினார்களாம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நியாஸ் கமால் உக்கடம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் பாசித் ஹாருன் , ரானிஷ், தாரிக் ஆகியோரை தேடி வருகிறார்கள். இவர்கள் மீது கொலை முயற்சி, தாக்குதல் உட்பட 4பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.