அடிதூள்!! மாணவர்களே உங்களுக்கான நியூஸ்… 3 ஆண்டு பாலிடெக்னிக் படித்தால் 12-ம் வகுப்புக்கு சமம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; பத்தாம் வகுப்பிற்குப் பின் பட்டயப்படிப்பு படித்து பின்பு, பி.இ. (B.E.) பட்டப் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு படிப்பு முடித்த மாணவர்கள், +2 படித்து முடித்து, பி.இ. படித்த பாணவர்களுடன் சமமாகக் கருதப்பட்டு, உதவிப் பொறியாளர் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர் என்றும் மேலும், பத்தாம் வகுப்பு படித்து, பட்டயப் படிப்பிற்குப் பின் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக பட்டப்படிப்பு பெற்று, பல அரசு பணிகளில் ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள், பணிவரன்முறை செய்வது தொடர்பாக தனியார்கள் தொடர்ந்து அரசுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து தெளிவான அரசாணை வெளியிடுவதற்காக, 10ஆம் வகுப்பிற்கு பின்பு, மேல்நிலை பள்ளிப்படிப்பு (42) படிக்காமல், பட்டயப்படிப்பு படித்து, பின்பு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக பட்டப்படிப்பு படித்துள்ளவர்களை, 10ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (+2) படித்து, பின்பு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக பட்டம் பெற்றவர்களுக்கு இணையாக வேலைவாய்ப்பிற்கு கருதலாமா என்ற பொருள் குறித்து இணைக் கல்வி நிர்ணயத் தகுதி குழுவில்’ பரிசீலித்து, அக்குழுவின் பரிந்துரையினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில், 03.12.2012 அன்று நடைபெற்ற இணைக் கல்வி தகுதி நிர்ணயக் குழுவின் 37வது கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இத்தீர்மானத்தின் மீது அரசாணை வெளியிட ஆவன செய்யுமாறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.