முதன் முறையாக கோவை மாநகரில் துப்பறியும் நாய் படை, அதி விரைவு படைபிரிவிலும் அசத்தும் பெண் போலீசார்.!!

கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இங்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இங்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இங்குள்ள போலீஸ் மோப்பநாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே துப்பறியும் நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் துப்பறியும் நாய் படைபிரிவில் பயிற்சி அளிப்பதற்காக மாநகர ஆயுதப் புடை பிரிவில் பணியாற்றும் திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது 25) தேனியை சேர்ந்த பவானி ( வயது 26 )ஆகிய 2பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வில்மா என்ற பெயர் கொண்ட லேப் ராடர் வகை நாய் பெல்ஜியம் மெலானா ராய்டு உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.. துப்பறிவு நாய் படை பிரிவில் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் போலீசார் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள்? என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது -போலீஸ் பணியில் சேர்ந்து 50 ஆண்டு பொன்விழா காணும் தமிழக பெண் போலீசாரை கவரவிக்கும் விதமாக பெண் போலீஸ் டிரைவர்கள் உட்பட அனைத்து காவல்துறைகளிலும் பெண் போலீசார் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.அதில் மோப்பநாய் பிரிவில் போலீசார் இல்லை. இதனால் நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட 2பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநகர போலீஸ் அதிவிரைப்படையிலும் 2 பெண் போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர் அவர் கூறினார்.