மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை- கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு..!

கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் ராஜாராம் பி.எஸ்.என்.எல் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உஷாராணி இவர்களுக்கு தீபன் என்ற மகன் உள்ளார். குடிபோதைக்கு அடிமையான ராஜாராம் தினமும் மது  குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மது குடித்துவிட்டு வந்த ராஜாராமுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜாராம் தனது மனைவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த உஷாராணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல், மனைவியை கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜாராமை  கைது செய்தனர். இது தொடர்பாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா ராமுக்கு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய பிரிவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 500 அபராதமும் விதிக்கப்பட்டது தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். இதை அடுத்து போலீசார் ராஜாராமை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.