குடும்ப பிரச்சனையில் மருமகனை கத்தியால் குத்திக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை- கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளி மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த ராணி இவருடைய மகள் மலர்க்கொடி இவருக்கு துரை என்பவர் உடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மலர்க்கொடியின் தந்தை உயிரிழந்து விட்டதால் அவருடைய தாயார் ராணி இரண்டாவதாக தண்டபாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இரண்டு பேரும் குடும்பம் நடத்தினர். பின்னர் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் இரண்டு பேரும் தனியாக மாப்பிள்ளை கவுண்டன் புதூரில் வீடு எடுத்து வசித்து வந்தனர். அங்கும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ராணி பிரிந்து சென்று அந்தப் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இதனால் அவரை மகள் மலர்கொடி மருமகன் துரை மற்றும் பேரக்குழந்தைகள் அவ்வப்போது சென்று பார்த்து விட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலர்கொடி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்றார். அப்பொழுது அங்கு வந்த தண்டபாணி தனது மனைவி ராணியுடன் தகராறு ஈடுபட்டார். உடனே வீட்டில் இருந்த துரை மற்றும் மலர்கொடி இருவரும் சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்தனர். அப்பொழுது ஆத்திரமடைந்த தண்டபாணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மருமகனான துரை குத்தினார். தடுக்க வந்த மலர் கொடியையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் பலத்த காயமடைந்த துறை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கு பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டபாணி கைது செய்தனர்.

பின்னர் இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தண்டபாணிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இதை அடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்