முதல் தனியாா் ராக்கெட் வெற்றி : வரலாற்றுத் தருணம்: பிரதமா் மோடி பெருமிதம்..!

ந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டான lsquo;விக்ரம்-எஸ் rsquo; வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது வரலாற்றுத் தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது வரலாற்றுத் தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். இதுதொடா்பாக, ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விக்ரம்-எஸ் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். மேலும், நாட்டின் தனியாா் விண்வெளி தொழில்துறை பயணத்தில் முக்கிய மைல்கல் ஆகும். கடந்த 2020, ஜூனில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளித் துறை முக்கிய சீா்திருத்தங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட நமது இளைஞா்களின் திறமைக்கு சாட்சியாக இந்தச் சாதனை அமைந்துள்ளது. இதை சாத்தியமாக்கிய இஸ்ரோ மற்றும் இன்ஸ்பேஸ் முகமைக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.