ரேஷன் பக்கம் செல்லாதவர் எல்லாம் திருப்தி அடையவில்லை என்று கூறுவது கவலை இல்லை- பிடிஆருக்கு பதிலடி கொடுத்த ஐ.பெரியசாமி.!

மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிடிஆர் கூட்டுறவுத்துறை தொடர்பாக பேசிய கருத்து தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டுறவு துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக தான் உள்ளது ஆனால் கூட்டுறவுத்துறையில் தினமும் சோதனைகள் நடத்தப்படுவது ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பது என பல்வேறு செய்திகள் வருகிறது கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி இருந்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை விமர்சத்து அவர் பேசி இருந்ததாக கட்சி தொண்டர்களே அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ரேஷன் கடை பக்கம் கூட செல்லாதவர் எல்லாம் திருப்தி அடையவில்லை என்று பற்றி கவலை இல்லை என அமைச்சர் பெரியசாமி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பான கேள்விக்கு பதில் கூறுகையில், கூட்டுறவுத் துறையில் திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் மக்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதற்காக மட்டுமே பயணிக்கிறோம் மக்களை திருப்திப்படுத்தினால் போதும் ஒரு வேளை ரேசன் கடையையே தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

நாங்க நிதியே கேட்கவில்லை, முதலமைச்சர், துறை அதிகாரிகள் பொதுமக்கள் திருப்தி ஆக இருக்கும் போது ஒருவர் மட்டும் திருப்தி அடையவில்லை என்று கூறினால் எங்கு குறை உள்ளது என்பதை அவரிடமே கேளுங்கள் சுட்டிக் காட்டட்டும் என்று தெரிவித்தார்.