பொள்ளாச்சி மரப்பட்டை பகுதியில் பேரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்குள்ள மர அறுவை மில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 5 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சர்வேஸ்வர் ஷூ ( வயது 39) என்று தெரிய வந்தது. இவர் கணபதி மணியன்காரம்பாளையத்தில் பாஸ்புட் கடை நடத்தி வருகிறார்.
Leave a Reply