கோவை சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டர் புதூரில் அருள்மிகு ஓம் சக்திகோவில் உள்ளது. கடந்த மாதம் இந்த கோவில் பூட்டை உடைத்து யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்தசாமி கழுத்தில் கிடந்த 4கிராம் தங்க மாங்கல்யம், 4 கிராம்தங்க தாலிகாசு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து கோவில் பூசாரி நாகராஜ் சூலூர் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து முத்து கவுண்டன்புதூர் அரசு காலனியை சேர்ந்த சண்முகவேல் (வயது 38)என்பவரை நேற்றுகைது செய்தார். இவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply