சிறுமுகை வனபகுதியில கருச்சிதைவால் பெண் யானை பரிதாபமாக உயிரிழப்பு.!!

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு, பெத்திக்குட்டை பிரிவு, பெத்திக்குட்டை சுற்று, இரட்டைக் கண் பாலம் வனப் பகுதியில் பிரிவு வனவர், சுற்று வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் நேற்றுரோந்து சுற்றிவந்தனர் .அப் போது மாலை வனப்பகுதி எல்லையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஒர் இளம் வயதுள்ள பெண் யானை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் சிசுவுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த யானை இன்று காலை கால்நடை மருத்துவ குழுவினரால் உடற்கூறு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் யானை இறப்புக்கான காரணம் தெரியவரும்.