மும்பை: இந்தியாவின் எதிர்காலம் மாட்டு வண்டிகள் தான் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.தற்போது, மின்சார வாகனங்கள் குறித்து பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. அனைத்து நாடுகளும், இந்த வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. மக்களும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் உலகளவில் மின்சார கார்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது. அதேபோல், இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதில், மகிந்திரா நிறுவனமும் மும்முரமாக உள்ளது.இந்நிலையில் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்தரா சமூக வலைதளத்தில், எலான் மஸ்க்கை மேற்கொள்காட்டி வெளியிட்ட அறிக்கையில், மாட்டு வண்டி தான் எதிர்காலம் எனக்கூறியுள்ளார்.
மேலும் மாட்டு வண்டி புகைப்படத்தை வெளியிட்டு, மாட்டு வண்டி தான் ஒரிஜினல் டெஸ்லா, எந்தவொரு கூகுள் மேப்பும் தேவையில்லை. எரிபொருள் தேவையில்லை. புகை மாசு இல்லை. முழுக்க முழுக்க தானாக இயங்கும் வாகனம். ஓய்வாக உறங்கி கொண்டே, செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம் . இவ்வாறு ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.
Leave a Reply