முதியவரை கொலை செய்த தந்தை, மகனுக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு

முதியவரை கொலை செய்த தந்தை, மகனுக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு

முதியவரை கொலை செய்த வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே செங்காட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 72). இவர் அக்ரஹார சாமக்குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். அதன் அருகே பன்றி இறைச்சி வியாபாரி ராமசாமி (75) என்பவர் செய்து வருகிறார். மேலும் அவர் வீட்டின் அருகே பன்றி இறைச்சி கடை நடத்தினார்.

தனக்கு சொந்தமான இடத்தை பழனிசாமி ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக ராமசாமி புகார் கூறி வந்தார். மேலும் பழனிச்சாமி வீடு கட்ட ரோட்டோரத்தில் மணல் கொட்ட கூடாது என்று ராமசாமி கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2017 – ம் ஆண்டு நவம்பர் 12 – ந் தேதி ராமசாமியும், அவருடைய மகன் ஏசுகுமாரும் சேர்த்து பழனிச்சாமியை தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோவில் பாளையம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமி, அவருடை மகன் ஏசுகுமார் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை நீதிமன்ற நடந்து வந்தது. அதை விசாரித்த நீதிபதி பாலு குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற ராமசாமி ஏற்கனவே ஒரு பெண்ணை கொன்ற வழக்கில் கைதாகி கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை 14 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து விடுதலையான ராமசாமி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.