கோவை பீளமேடு சிவில் விமான நிலைய ரோட்டில் உள்ள ஜி .ஆர் .ஜே .நகரை சேர்ந்தவர் மரிய பிரதீப் ( வயது 42 ) வியாபாரி. இவர் நேற்று தனது மனைவியுடன் கொடிசியா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு தனது மகனை அழைப்பதற்காக சென்றார் .காரை பள்ளிக்கூடம் முன்நிறுத்திய போது இரு சக்கர வாகனத்தில் ஒரு திருநங்கை அங்கு வந்தார்.மரிய பிரதிபிடம் பணம் கேட்டார்.மரிய பிரதீப் கார் கதவை திறந்து பர்சில் உள்ள 10 ரூபாயை எடுத்து அவருக்கு கொடுத்தார்.அந்த திருநங்கை அவர்களுக்கு தலையை தொட்டு ஆசீர்வாதம் செய்தார்.பின்னர் அங்கிருந்து சென்று விட்டார் . சிறிது நேரம் கழித்து பர்சைபார்த்த போது அதில் ரூ 8ஆயிரத்தை காணவில்லை .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் .சக்தி நகரை சேர்ந்த திருநங்கை இளவாஞ்சி (வயது 30) என்பவரை நேற்று கைது செய்தார். இவரிடமிருந்து ௹3 ஆயிரம் மீட்கப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply