பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கவுள்ளதாகாவும் இதன் மூலம் 34.64 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் 15 ஆயிரத்து 454 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், நவோதயா பள்ளிகளை அமைக்க இடங்களைத் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இருமொழி கொள்கை என்பதில் தமிழ்நாடு அரசு அன்றும் என்றும் உறுதியாக உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு மொத்தமாக 724 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் செவ்வாய் அன்று முதலமைச்சர் விஜய் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.புழல் சிறையில் இருக்கும் சிறை கைதி கூட சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார். நமது பள்ளி குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு உள்ளது. வரும் காலத்தில் நிச்சயமாக பள்ளி குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்.” என ராஜ்மோகன் தெரிவித்தார்.









