இன்ஜினியரிங் மாணவருக்கு பீர் பாட்டில் குத்து-போலீசார் விசாரணை..!!

கோவை : தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் சர்ச் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் சரவணகுமார் (வயது 27) இவர் மதுக்கரை அருகே சீராபாளையத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அஜித்குமார் என்பவரது வீட்டில் தங்கி உள்ளார் ,நேற்று வீட்டின் உரிமையாளர் அஜித்குமார் சரவணக்குமாரின் தந்தை செல்வராஜ் க்கு போன் செய்து உங்கள் மகனை யாரோ தாக்கி காயப்படுத்தி உள்ளனர். சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.இது பற்றிதகவல் அறிந்ததும் செல்வராஜ் நேற்று அங்கு விரைந்து வந்தார். விசாரணையில் அவரது மகன் சரவணகுமார் கடந்த 2 நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இவரை யார்? பீர் பாட்டிலில் குத்தினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.