கோவை கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது-போதை ஊசிகள், மாத்திரைகள் பறிமுதல்..!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் ரயில்வே பாலம் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினார்கள்.அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.அவர்களிடம் போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .இதையடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டனர் . விசாரணையில் இவர்கள் கணுவாயை சேர்ந்த அசார் என்ற அசாரூதீன் ( வயது 24) இடையர்பாளையத்தை சேர்ந்த சகாய விஜய் (வயது 26 ) வடவள்ளியை சேர்ந்த கோகுல் ( வயது 24) என்பது தெரிய வந்தது.இவர்கள் அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.