கலர் கலராக காலிபிளவர்: ரசாயன கலவையா கோவையில் பொதுமக்கள் குழப்பம்

கலர் கலராக காலிபிளவர்: ரசாயன கலவையா கோவையில் பொதுமக்கள் குழப்பம்

காய்கறி, பழங்களைத் தினமும் உணவில் பயன்படுத்துவது பலரும் கடைப் பிடிக்கும் ஆரோக்கியமான பழக்கம். இதில் முக்கியமானது. தினமும் காய்கறி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டச் சத்தைப் பெற முடியும் என்கின்றனர். ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இந்நிலையில் சமீபகாலமாக இயற்கைக்கு மாறாக பல்வேறு உணவு வகைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது பழங்கள், காய்கறிகள் பல வண்ண கலர்களில் வருவதால் பொதுமக்கள் அது ரசாயனக் கலவையினால் நிறம் மாறப்பட்டுள்ளதா ? இதனால் உடலுக்கு ஆபத்து ஏற்படுமா? என்று பல்வேறு குழப்பம் அடைந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பழமுதிர் நிலையத்தில் பல வண்ண நிறங்களில் காலிஃப்ளவர்கள் வைக்கப்பட்ட இருந்தது அங்கு சென்ற பொது மக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.