கோவை சூலூர் பக்கம் உள்ள ஜெய் கிருஷ்ணாபுரம், வலசு பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 83 நேற்று இவர் காரில் தாராபுரம் சென்று கொண்டிருந்தார். காரை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சடையபாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 36) என்பவர் ஓட்டினார். பல்லடம் – தாராபுரம் ரோட்டில் செஞ்சேரி புதூர் அருகே சென்றபோது கார் திடிரென்று நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியது .இதில் காரின் முன் சீட்டில் இருந்த ஆறுமுகம் அதே இடத்தில் பலியானார் .இது குறித்து அவரது மகன் சிவசுப்பிரமணியம் சுல்தான் பேட்டை போலீஸ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக டிரைவர் தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply