(Blue Tick) நீல நிற பேட்ஜைப் பெறுவதற்கான சந்தா சேவை குறித்த அறிவிப்பை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி மாதசந்தா குறித்த அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அதன் தாக்கம் தற்போது பறந்துவிரிந்துவிட்டது.
அதேநேரம், இணைய உலகில் போலி (Fake) என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் பேஸ்புக் பயனர்களின் தகவல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. நமக்கு தெரிந்த நண்பர்களின் பேஸ்புக் பக்கத்தை போன்று ஒரு புதிய பேக் ஐடி உருவாகி இருப்பதை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதனால், முக்கிய பிரபலஙகள் தங்களது சமூக வலைதளப்பக்கங்களை வெரிபை செய்துள்ளனர். அந்த பக்கத்தில் வெளியாகும் தகவல்களை கொண்டு அது சம்மந்தப்பட்ட நபரின் அதிகாரப்பூர்வ கருத்து என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.
மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பெரிய நிறுவனங்கள் தங்களுக்கென தனி பேஜ்ஜை நிர்வகிப்பார்கள். அதில், அவர்களை பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகளை பகிர்வார்கள். இதுபோன்ற பக்கங்களை அவர்களுடையதுதான் என நாம் தெரிந்து கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி அந்த பக்கம் வெரிஃபை அதாவது ப்ளு டிக் (Blue Tick) செய்யப்பட்டிருப்பதை வைத்துதான்.
இந்நிலையில், சமூகவலைதளங்களில் கோலோச்சும் நிறுவனமான பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தற்போது பேஸ்புக் பயனாளர்கள் ப்ளுடிக் பெறுவதற்கான புதிய சந்தா முறையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஆன்ட்ராய்டு பயனர்களுக்கான கட்டணமாக மாதம் ரூ. 992.36 ஆகவும் ஐஓஎஸ் பயனர்களுக்கு ரூ.1240.66 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக
கட்டணம் செலுத்தும் பயனாளர்கள் தங்கள் சுயவிவரத்தை அரசாங்க ஐடி மூலம் சரிபார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பேஸ்புக் பயனாளர்களின் அக்கவுண்ட் பாதுகாப்பை உறுதி செய்யும் எனவும் இந்த சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்தவாரம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சர்க்கர்பெர்க் அறிவித்துள்ளார். பணம் செலுத்தும் சந்தா முறை மற்ற நாடுகளுக்கும் அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சந்தா முறை பேஸ்புக் பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Leave a Reply