டாஸ்மாக்கை மிஞ்சிய வருமானம்… ஒரு பகீர் தகவல்- கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் போலி மது விற்பனை அமோகம் – விரைவில் உயிர்பலி அபாயம்..?பொதுமக்கள் அச்சம்.!!

கோவை மாநகரிலும் புறநகர் மாவட்டத்திலும்  டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது.இந்த நிலையில் சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து எரி சாராயம் வாங்கி போலி மது தயாரித்து கோவை சுற்று வட்டாரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த மது பாட்டில்களை வாங்கி வந்து சூலூர், இருகூர், சின்னியம்பாளையம், ,பாப்பம்பட்டி கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளில் பதுக்கி வைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை விட  இவர்கள் ரூ50 வரை விலை  குறைத்து விற்பனை செய்கிறார்களாம. இந்த போலி மதுவை கடத்தி வருவதில் அரசியல் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். இந்த கும்பல் ஒவ்வொரு ஊர்களிலும் ஒரே இடத்தில் மதுவை விற்காமல் நாள்தோறும் இடத்தை மாற்றி வைத்து விற்பனை செய்து வருகிறார்களாம்.

நமது தமிழக அரசின் மிக முக்கிய வருமானங்களில் ஒன்று டாஸ்மாக் வருமானம் இன்று நமது அரசாங்கத்தின் பெருமளவு வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக்கில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும் அனைத்தையுமே தீர்க்க முடியாமல் ஓரளவு பிரச்சனைகளை மட்டும் தீர்த்து அவ்வப்போது ஏதாவது அதிரடி சட்டங்களை ஏற்படுத்தி வருவாயை உயர்த்தி வருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் தினமும் டாஸ்மாக் கடை செயல்படாத நேரங்களில் கருப்புச்சந்தையில் கர்நாடக அதாவது பெங்களூரு,புதுச்சேரி  ஸ்பிரிட்  கள்ள சரக்குகள் பெருமளவில் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.மேலும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் டாஸ்மாக் விடுமுறை என வரும் போது தான் ஒரு சில நபர்களுக்கு பெரும் குஸியாக போய் விடுகிறது காரணம் அப்போது தான் குடி மகன்களிடம் வெளிமாநில மது வகைகளை அதிக அளவில் விலை வைத்து விட்டு அதிக லாபம் சம்பாதிக்கின்றனர் ஒரு சிலர் .இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள கருமத்தம்பட்டி, இருகூர், பாப்பம்பட்டி மற்றும்  சூலூர் போன்ற பகுதிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பல்வேறு நிறுவனங்களில் தின கூலிகளாக பணியமர்த்தி வேலை செய்து வருகின்றனர் .இவர்களுக்கு சனிக்கிழமை தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது இருந்தபோதிலும் அவ்வப்போது முன் தொகையாக பணமும் பெற்று வருகின்றனர். கடந்த காலங்களில் வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலும் ஹான்ஸ் புகையிலை போன்ற பொருட்களை பயன்படுத்தி வந்தனர் ஆனால் தற்சமயம் கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் இதர மாவட்டங்களில் தமிழக முழுவதும் இந்த புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இந்த வியாபாரத்தை நம்பி இருந்தவர்கள் அனைவரையுமே போலீசார் கைது செய்து பொருட்களை மீட்டு வருகின்றனர் . இதனால் வடமாநில இளைஞர்கள் தங்களுடைய போதைக்காக டாஸ்மாக்கை  நாட துவங்கியுள்ளனர் . இது ஒருபுறம் இருந்தாலும் 12 மணிக்கு திறக்கும் டாஸ்மாக் கடையை மட்டும் நம்பி இல்லாமல் காலை 6 மணி முதல் சிலர் மதுவிற்கு அடிமையாகி மது கடைகளை தேடி ஓடுகின்றனர். அப்போது இவர்களை குறி வைத்து  வரும் ஒரு கும்பல் அவர்களிடம் இருக்கும் வெளி மாநில சரக்குகளை விற்று வருகின்றனர். இதில் டாஸ்மாக் வருமானத்தை விட அதிகமாக சம்பாதித்து வருகின்றனர் . இது ஒரு புறம் இருந்தாலும் காந்தி ஜெயந்தி மகாவீர் ஜெயந்தி இது போன்ற நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இது போன்ற நாட்களில் தான் இவர்களுடைய வருமானம் உச்சத்தை ஏற்றுகிறது. ஏதாவது ஒரு வகையில் கர்நாடகா புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த விலையில் உள்ள மது வகைகளை வாங்கிக் கொண்டு வந்து இங்கு விற்கப்படும் மது பாட்டில்களில் அவற்றை நிரப்பி அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். இந்த கும்பல் சராசரியாக டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு நாள் விடுமுறை என்றால் இவர்களுடைய வருமானம் ஒரு டாஸ்மாக் கடையில் ஒரு லட்சத்தை தாண்டுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அன்றைய தினம் இந்த விலை மாநில சரக்குகளை விற்பவர்களின் கணக்கு எண்ணென்று இதற்கு சில உள்ளூர் காவல்துறையினரும் பார் உரிமையாளர்களும் உடைந்தையாக இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஏற்கனவே டாஸ்மாக் கடையில  மது அருந்தி பலரும் உயிர் இழப்பதை  நாம் தினமும்  செய்திகளாக பார்க்கின்றோம். இந்த வெளி மாநில மது வகைகளும் அதிக அளவு ஸ்பிரிட்  கலந்து இருப்பதால் மிக கொடிய நஞ்சாக மாறி பல உயிர்களை எடுக்கும் முன்பே காவல்துறையினரும் கலால் துறையினரும் அரசும் விழித்துக் கொண்டு இது போன்ற வெளி மாநில கள்ள  சரக்குகளை வாங்கி வந்து விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவற்றை தடுக்க முடியும்.மேற்குறிப்பிட்ட இடங்களில் ஏற்கனவே பலபேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளபோதும் ,காவல்துறயினர் என்ன காரணத்தினால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்பது புதிராக உள்ளது. மேலும்   கோவை இருகூர் சூலூர் சின்னியம்பாளையம் பகுதிகளில் வியாபாரம் படுச்ஜோராக நடிக்கிறது. இந்த வியாபாரத்தில் ஒரு நபர் குறைந்தது மாதம் மூன்று லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.எனவே இவர்கள் காவல் துறையையும் படு ஜோராக கவனிப்பதாக கூறப்படுகிறது.இவர்களில் சிலர் கார்களில் சென்று சரக்குகளை வேண்டிய இடத்தில அமேசான்,பிளிப்கார்ட் நிறுவனங்களை போல ஆன்லைன் வியாபாரம் போல சப்ளை செய்து வருகின்றனர்.

இதை காவல்துறையும் அரசும் உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் மீண்டும் ஒரு செங்கல்பட்டு நிகழ்வு கோவை மாவட்டத்தில் ஏற்பட்டு விரைவில் உயிர் பலி ஏற்படும் அரசாங்கத்துக்கும் வருவாய் இழப்பும் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கின்றனர்..