தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மீன் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை அருகே உள்ள கே. கே .புதூர் சுந்தரம் விதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42 ) தற்போது இவர் கணபதி, திருவேங்கடம் முதல் வீதியில் வசித்து மீன் வியாபாரம் செய்து வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து அவரை வீட்டு படுக்க அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சுபாஷினி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மீன் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.