கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் ரோட்டில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( வயது 41)இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு 1.93 லட்சத்தை காணவில்லை.யாரோ நள்ளிரவில் பூட்டை உடைத்து திருடி சென்று விட்டனர். இது குறித்து சுரேஷ்குமார் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply