பொதுவாக பெண்களுக்கு மேக்கப் போடுவது பிடித்தமான ஒன்று, அப்படிப்பட்ட இந்த மேக்கப் மூன்று ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது.
அப்படி மேக்கப் போட்டு பியூட்டியாக மாறி ஆண்களை ஏமாற்றியது ஒரு பாட்டி என்பது தான் ஹைலைட் ஆன விஷயம். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரி என்பவர் கடந்த 2008 ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். பின்னர் அவருக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனை தொடர்ந்து ஹரியின் அம்மா ப்ரோக்கர் மூலமாக தனது மகனுக்கு இரண்டாவது கல்யாணத்திற்கு வரன் தேடி வந்துள்ளார்.
அப்போது தான் இந்த பாட்டி அறிமுகமாகி இருக்கிறார், ஆந்திர மாவட்டம் சித்தூரை சேர்ந்த இவர் தான் ஒரு அனாதை என்றும், தன் பெயர் சரண்யா, தனக்கு 35 வயது ஆகிறது என்று பொய் கூறி ஹரியை திருமணம் செய்துள்ளார். கல்யாணமான புதிதில் ஹரி அவரது ஆசை மனைவிக்கு 25 சவரன் நகைகளை பரிசாக கொடுத்துள்ளார், பின்னர் ஹரியின் சொத்து மதிப்புகள் குறித்து சரண்யா கேட்டறிந்துள்ளார். அந்த சொத்துக்களை தனது பெயரில் எழுதி வாங்க நினைத்தவர் அதற்கு தடையாக இருந்த மாமியாரை சண்டை போட்டு வீட்டை விரட்டிவிட்டார். பின்னர் ஒருவழியாக ஹரியை சமரசம் செய்து தனது பெயரில் சொத்துக்களை எழுதி வாங்க வழி செய்துவிட்டார்.
ஹரியும் சொத்துக்களை சரண்யா பெயரில் எழுதி வைக்க ஒப்புதல் தெரிவித்து, சரண்யாவின் அடையாள அட்டைகளை தருமாறு கேட்டுள்ளார். அப்போது தனக்கு அடையாள அட்டை எதுவும் இல்லை என்று சரண்யா கூறியுள்ளார், பின்னர் அவரின் ஆதார் அட்டை கிடைத்துவிட அதில் சரண்யாவின் பெயர் சுகுணா என்று இருந்திருக்கிறது. இதுகுறித்து ஹரி கேட்டதற்கு அவர் தன்னை வீட்டில் சரண்யா என்று செல்லமாக கூப்பிடுவார்கள் என்று கூறி சமாளித்து இருக்கிறார். பின்னர் அந்த அடையாள அட்டையில் இவரது வயதை கணக்கிட்டபோது 54 வயது என்பது தெரியவந்ததும் ஹரி அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த ஹரியின் தாயார் காவல் நிலையத்தில் சரண்யா மீது புகாரளித்துள்ளார். அப்போது தான் பியூட்டியாக மாறிய பாட்டியின் உண்மை முகம் வெட்டவெளிச்சத்திற்கு வந்தது.
இவர் ஹரியை திருமணம் செய்வதற்கு முன்னர் இதே போல இரண்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் மேக்கப் போட்டு இந்த பாட்டி ஆண்களை ஏமாற்றியதும் தெரிய வந்தது. இவருக்கு குருவே இவர் தாயார் தானாம். தாய், மகள் இருவரும் திட்டம்போட்டு பணம் சம்பாதிப்பதற்காக இப்படிபட்ட வேலையை செய்திருக்கின்றனர். தற்போது இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Leave a Reply