கோவை ஜவுளிக்கடை பூட்டை உடைத்து துணிகள் திருட்டு..!

கோவை ராமநாதபுரம் சுப்பையா தேவர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் திருச்சி சாலையில் பிப்டி பிப்டி என்ற பேரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்று விட்டார். மீண்டும் அவர் கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த பொழுது 252 சட்டைகள் 70 பேண்ட்டுகள், 123 ஜீன்ஸ் பேண்ட்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை திருடு போய் இருந்தது. இதை தொடர்ந்து ஜெகதீசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.