காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் போக வேண்டாம் – மருத்துவத்துறை எச்சரிக்கை..!

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது..

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..

இந்த நிலையில் கோடைகால வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மருத்துவத்துறை அறிவித்துள்ளது.. மருத்துவத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “, மதுபானம், டீ, காபி, கார்பன் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக புரதச்சத்துள்ள உணவுகள், பழைய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்.. அதிக உடல் வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டால் அல்லது வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டால் 108 அல்லது 104 அவசர உதவி எண்ணை அழைக்க வேண்டும்..” என்று தெரிவித்துள்ளது..