பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று காலமானார்-அதிர்ச்சியில் திரையுலகினர்..

தமிழ் திரைப்பட இயக்குநரும் மற்றும் படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மனோபாலா (69) அவர்கள் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவர் தமிழில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் நகைச்சுவை வேடங்கள் தவிர குணச்சித்திர வேடங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இவரது மறைவு திரைத்துறைக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மனோபாலா அண்மையில் அவரது உடலில் உள்ள கல்லீரல்லில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்தார். அவரது உடல் விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.. திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்..நாளை அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.. ரஜினி, கமல் இளையராஜா, பாரதிராஜா, சத்யராக் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.