பல்வேறு குற்றங்களில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி வழிப்பறி வழக்கில் கைது..!

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஏற்கனவே அடிதடி கஞ்சா விற்பனை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் ஜீவானந்தம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி 600 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு சென்றார். இது குறித்து வல்லரசு ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சின்னப்ப கவுண்டர் வீதியைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் கஞ்சா வியாபாரி மாணிக்கம் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.