சென்னை: கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக 2020 மார்ச் 24 முதல் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் வழக்கு விசாரணை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது.
பின்னர் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வானதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை நடந்தது. தற்போது வரை இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் 7ம் தேதி முதல் வழக்கு விசாரணை முழு அளவில் நேரடியாக நடைபெறும் என்று நேற்று ஒரு வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்தார். அதன் பிறகு வீடியோ கான்பரன்ஸ் விசாரணை நடைபெறாது என்று கூறப்படுகிறது.
Leave a Reply