குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம் : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் – மழை வருமா..? எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் கோவை மக்கள்.!!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையின் ஒரு பகுதியில் நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறுவாணி மலை அடிவாரத்தில் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
இந்த அணையில் இருந்து தினமும் 100 எம்.எல்.டி (10 கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்க முடியும். இந்த அணை ஒருமுறை நிரம்பினால் ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடுயின்றி எடுத்து விநியோகம் செய்ய முடியும். கடந்த ஆண்டு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணை நிரம்பவில்லை . இந்நிலையில் திடீரென அணையில் இருந்து 30 எம்.எல்.டி அளவுக்கு தண்ணீர் எடுக்க கேரளா அரசு அனுமதித்தது. இதன் காரணமாக கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படத்த தொடங்கியது. எனவே கேரளா அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பெயரில் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டது. இதை அடுத்து அணையில் இருந்து தினமும் 7 கோடி 30 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியது. எனவே அணையில் இருக்கும் தண்ணீருக்கு ஏற்றவாறு குடிநீர் எடுக்கும் அளவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 18 அடியாக குறைந்தது. அணையில் இருந்து 40 எம்.எல்.டி (4 கோடி லிட்டர்) தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் குறைய குறைய அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணையில் இருக்கும் தண்ணீரை வைத்து தினமும் 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்தால் ஜூன் மாதம் வரை குடிநீர் விநியோகிக்கலாம் . எனவே குறைந்த அளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் உயரும் . அப்பொழுது கூடுதலாக தண்ணீர் எடுக்க வாய்ப்பு உள்ளது..