மாஜி தலைமை ஆசிரியை வீட்டில் புகுந்து கொள்ளையடித்த 3 பேர் கைது – 32 பவுன் நகை பறிமுதல்..!

கோவையை அடுத்த வேடப்பட்டி குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70 ) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .இவர் கடந்த பிப்ர. மாதம் 27ஆம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மரபு நம்பர்கள் திடீரென்று வீட்டின் பின்பகுதி வழியாக நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் செயின் கையில் அணிந்திருந்த 4 பவுன் வளையல்கள் மற்றும் முக்கால் பவுன் மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த சேலையால் விஜயலட்சுமி நாற்காலியில் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமாக தேடி வந்தனர் . இந்த நிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த கொள்ளையர்கள் 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கோவை டாட்டாபாத் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்ற இயேசு அருள் (வயது 35) சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ( வயது 38) தேனியை சேர்ந்த அருண்குமார் ( வயது 27 ) என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 32 பவுன் நகை மீட்கப்பட்டது. கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.