போலீஸ் அலுவலகத்திலேயே வக்கீலுக்கு கொலை மிரட்டல் – 4 பேர் மீது வழக்குபதிவு ..!

கோவை  அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே உள்ள அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஷிலா ராஜ் (வயது 42) இவர் நேற்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தனது கட்சிக்காரர் சிவாஜி என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து ஷிலாராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சூரியமூர்த்தி ,அசோகன், சேட்டு , வேலுசாமி ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட 2 பிரிவகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..