கோவை துடியலூர் ஜி. என். மில். அன்னை கார்டன் அருகே அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தை தினகரன் ( வயது 49) என்பது தெரிய வந்தது. இவர் சூலூர் அருகே உள்ள பட்டணத்தில் மளிகை கடை நடத்தி வந்தார்.கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து அவரது தந்தை சொகப்பழம் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.