அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத் தள்ளலாம் : முப்படைக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு.!!

கொழும்பு: இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீதும் தூப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முப்படையினருக்கு அனுமதி வழங்கி இலங்கை அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வன்முறையை கைவிடுமாறும் அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருதாகவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாகவும் அதிபா் அதிபா் கோத்தபய ராஜபக்சே தனது டுவிட்டா் பக்கத்தில் தொிவித்துள்ளாா். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபா் கோத்தபய ராஜபக்சேவின் அரசே காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கொழும்புவில் நடைபெற்று வந்த போராட்டமானது வன்முறையாக மாறி நாடு முழுவதும் பரவியது. இதனையடுத்து மக்கள் அமைதி காக்குமாறும் வன்முறையை நிறுத்துமாறும் அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார் என்று அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே தமது குடும்பத்தினருடன், திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும், அவர் கப்பல் மூலம் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. திரிகோணமலை கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார் என்று, அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.