கோவையில் கோவில் முன்பு காரிலிருந்த சிலிண்டர் வெடித்த விவகாரம்: உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவந்தது…

கோவையில் கோவில் முன்பு காரிலிருந்த சிலிண்டர் வெடித்த விவகாரம்: உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவந்தது…

கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கோவில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் தற்போது தெரியவந்து உள்ளது. அவர் கோட்டைமேட்டை சேர்ந்த ஜமேஷா முபீன் என்பது. இவர் பழைய துணி விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார்.

கடந்த 2019 ல் இவரிடம் NIA விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.