கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் 

கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவை கணபதி கட்டபொம்மன் வீதியில் ஒரு கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை மாநகர உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், காவல் துறையினர் அங்கு சோதனை நடத்தினா்.

இதில், 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ரத்தினபுரியைச் சோ்ந்த ஹபிபுல்லா (55) என்பவரை தேடி வருகின்றனா்.