தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி விரைவில் கைது – முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு.!!

மிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… நடிகை கஸ்தூரி விரைவில் கைது- முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு.!!அவதூறாக பேசினார்.

அதாவது கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சென்னை உட்பட பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்கு பதிவு ‌ செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் அனுப்ப சென்ற நிலையில் அவர் தலைமறை வாகிவிட்டார். அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வரும் நிலையில் மதுரை உயர்நீதிமன்ற நிலையில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கஸ்தூரியன் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் இதனால் நடிகை கஸ்தூரி விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.