சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, 80, வயது மூப்பின் காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார்.
கட்சியின் தலைமை பொறுப்பை தனது மகன் துரை வைகோவிடம் கொடுத்து விட்டு, ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும், அவ்வப்போது, அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில், வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது, வைக்கப்பட்ட பிளேட்டை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.